ஏப்ரல் 6ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் ஆணையம் உத்தரவு.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.அதில் பதிவான வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து வேட்பாளார்களை அறிவித்ததுடன், வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றன.
அதேசமயம், தேர்தல் ஆணையமும் நாடு முழுவதும் கொரோனா பரவல் முமுமையாக விலகாத நிலையில் பாதுகாப்பாக தேர்தலை எவ்வாறு நடத்துவது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு, வேட்பாளர்கள் கண்காணிப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
தொழிலாளர் ஆணையம் உத்தரவு:
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சூழலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு நாளான ஏப்.6ஆம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.