சித்த மருத்துவ குறிப்புகள்: அரைக் கீரையின் பயன்கள்,அன்னாசியின் பயன்கள். - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: அரைக் கீரையின் பயன்கள்,அன்னாசியின் பயன்கள்.

 சித்த மருத்துவ குறிப்புகள்: அரைக் கீரையின் பயன்கள்,அன்னாசியின் பயன்கள்.

அரைக் கீரையின் பயன்கள்,

  •  அரைக்கீரையுடன்,  பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
  •  அரைக் கீரை தண்டுடன், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் ,நுரையீரல் தொடர்பான கப நோய்கள் குணமாகும்.
  •  அரைக்கீரையுடன் ,சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் குளிர் காய்ச்சல்  , ஜன்னி, வலிப்பு நோய் போன்றவற்றை   குணமாகும்.
  •  அரைக்கீரையுடன் ,மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து சாற்றை வடித்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
  •  அரைக் கீரையை, சிறுபருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை மறையும்.
  •  அரைக்கீரை வேர் ,நில வேம்பு, மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான பாதிப்புகள் குணமாகும்.
  •  அரைக்கீரை சாற்றில் ,மிளகை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து அதில் தினமும் 5 சிட்டிகை அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால்  வந்தால் கை, கால் ,நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  •  கீரை சாற்றில், சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி எடுத்து பிறகு, எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து உலர்த்தி எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை எடுத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் வாத, பித்த ,கபம் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புக்கள் குணமாகும்.
  •  அரைக்கீரை சாற்றில், வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன் ,பொடுகு ,பிரச்சினைகள் நீங்கி முடி நன்றாக வளரும்.
  •  அரைக்கீரை சாற்றில், அரிசியை ஒரு கிராம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
  •  அரைக் கீரையுடன் ,சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குணமாகும்.
  •  அரைக்கீரையை வாரம்  இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறும் ,உடல் வலிமை பெறும்.

 அன்னாசியின் பயன்கள்:

  •  அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும்.
  •  அன்னாசிப்பழ இலையை இடித்து சாறு எடுத்து 15 மிலி அளவு குடித்தால் தீராத விக்கல் தீரும். சாற்றின் அளவை  அதிகப்படுத்தி குடித்தால் உண்டாகி குடல் சுத்தமாகும்.
  •  அன்னாசி பழ சாற்றை சூடுபடுத்தி குடித்தால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு ,காமாலை போன்ற நோய்கள் விலகும் .
  • அன்னாசி பூ பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணம், மந்தம், புளித்த ஏப்பம் போன்றவை குணமாகும்.
  •  அன்னாசிப் பூவை அரைத்து வயிற்றில் பூசி வந்தால் பெருவயிறு குறையும்.
  •  அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள், குணமாகும்.
  •  அன்னாசி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
  •  அன்னாசி பழ விதை எலுமிச்சை பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை. மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  •  அன்னாசிப் பழச்சாற்றுடன் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

Leave a Comment