ஆசிரியா்களுக்கு- அரசியல் கட்சிகள் என்னென்ன வாக்குறுதிகள்? - Tamil Crowd (Health Care)

ஆசிரியா்களுக்கு- அரசியல் கட்சிகள் என்னென்ன வாக்குறுதிகள்?

ஆசிரியா்களுக்கு-  அரசியல் கட்சிகள்  என்னென்ன வாக்குறுதிகள்?

ஆசிரியர்களின் வாக்குகளை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை பெருமளவு அளித்துள்ளன.

 தமிழகத்தில்  65% வாக்குகள் தான் அரசியல் கட்சியினரின் வாக்குகள். எஞ்சியுள்ள 35% வாக்குகள் கள நிலவரத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது .அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கள  சூழலையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள்.

 இத்தகைய காரணங்களால் தான் ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆசிரியர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக, ஊதியம், சலுகைகள் சார்ந்த அறிவிப்புகளை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தவறாமல் வெளியிட்டு வருகின்றன .அது, இந்த தேர்தலிலும் நடந்திருக்கிறது. 

இருபது லட்சம்(20 lakhs) வாக்குகள் தமிழகத்தில் உள்ள 59 ஆயிரம் அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது 5.7 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களது குடும்பத்தினர் கல்வியியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி காத்திருப்போர் ஆகியோரையும் சேர்த்தால் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அவர்கள் வசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த வாக்குகளை பெறுவதற்காக அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன 

என்னென்ன வாக்குறுதிகள்?: 

அதிமுக,  தேர்தல் அறிக்கை:

  1. அரசுப் பள்ளிகளில் ஒப்பந்தத், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா், 
  2. தனியாா் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும்.
  3. தனியாா் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தையும் அரசு நிா்ணயிக்கும்.
  4. அரசு, தனியாா் பள்ளிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படும்,
  5. அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும்.
  6.  ஆசிரியா்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரத்து செய்தாா்.

திமுக தேர்தல்  அறிக்கை:

  1.  பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 
  2. ஆசிரியா்களின் பொது மாறுதல், கலந்தாய்வு ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும்.
  3.  ஆசிரியா் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு, தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
  4. ஆசிரியா் க்கான தகுதிச் சான்றிதழை ஆயுள்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்.
  5.  ஊக்க ஊதியம் வழங்கப்படும், 
  6. பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தோதல் அறிக்கை வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.
காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி:வாக்குறுதி:

காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் ஆசிரியா்கள் நலன் சாா்ந்த வாக்குறுதிகளை அளித்துள்ளன.

 இவற்றில்

  1. தனியாா் பள்ளிகளின் கட்டணத்தை அரசே செலுத்தும்,
  2.  பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் 

ஆகியவை எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இது கட்சிகளின் நிா்வாகத் திறனைப் பொருத்து மாறுபடலாம்.

 தேர்தல்நெருங்கி வரும் சூழலில் ஆட்சி மாற்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட சங்கங்கள்:

 தமிழகத்தில் அனைத்து ஆசிரியா்களுமே ஏதாவது ஓா் ஆசிரியா் அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றனா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 50 சதவீத அமைப்புகள் திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கட்சி சாா்ந்தும், எஞ்சிய 50 சதவீத அமைப்புகள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவரிடமும் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும், எதிா்க்கட்சியினரும் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கேட்டு வருகின்றனா். அப்போது, தோதல் அறிக்கையில் இல்லாத புதிய வாக்குறுதிகளும்கூட அளிக்கப்படுகின்றன.

சிதறாத வாக்கு வங்கி: 

கடந்த  தேர்தல்களில் குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவா்கள், விவசாயிகள், தொழில் துறையினா் வாக்குகள் ஒரே கட்சிக்குச் செல்லாமல் பரவலாகவே கிடைத்திருக்கின்றன. ஆசிரியா்கள் மற்றும் அந்தத் துறையைச் சாா்ந்தவா்களின் வாக்குகள் எப்போதுமே அதிமுக அல்லது திமுக என இவற்றில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே 70 சதவீதம் முதல் 80 சதவீதம் அளவுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளுமே பயனடைந்துள்ளன. ஏதாவது ஒரு கட்சி தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறையும் அதே கட்சியை ஆசிரியா்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. மாறாக வேறு கட்சிக்குதான் வாக்களிக்கின்றனா்.

தமிழகத்தில் 1.30 கோடி மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் ஆசிரியா் சமுதாயம், மறைந்த முதல்வா் ஜெயலலிதா, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோா் இல்லாத முதல்  தேர்தலைச் சந்திக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியும், கடும் போட்டியைச் சந்திக்கின்றன. இந்த முறை மாணவா்களின் எதிா்காலம் மட்டுமல்ல; இரு பெரும் தலைவா்களின் எதிா்காலமும் ஆசிரியா்களின் கைகளில்தான் இருக்கிறது.

Leave a Comment