PGTRB-TET- கல்வியியல் வினா- விடை. - Tamil Crowd (Health Care)

PGTRB-TET- கல்வியியல் வினா- விடை.

 PGTRB-TET- கல்வியியல் வினா விடை.

1) நவோதயா பள்ளிகள் இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் இல்லை.

 2)சிக்மன்ட் பிராய்டு மனவியலின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

3) 1966இல் தமிழ்நாட்டில் பள்ளி சாரா கல்வி கென்று தனி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

 4)சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்.

5) தமிழ்நாட்டிற்கு கிருபஸ்கையா என்னும் அனைத்துலக பரிசினை உயர்நிலை கல்விக்காக UNSCEO வழங்கியது.

6) பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர் மதன் மோகன் மாளவியா. 

7)பெஸ்ட்டாலஜி பொருள் மைய கல்வியை வலியுறுத்துகிறார்.

 8)இந்தியாவின் பழமையான புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம்.

 9)கற்றலின் அறிவுப் உலக வரைபடத்தை வழங்கியவர் டோல்மேன்.

10)சாந்திநிகேதன் என்பதற்கு ‘அமைதி தழுவும் இடம்’ என்று பொருள்.

11) புதுமையின் 5 சிறந்த குணங்களை கூறியவர் கார்கில்  ரோகர்ஸ்.

12)லிபரல் கல்வி முறையை பின்பற்றும் நாடு அமெரிக்கா.

13) வளரும் நாடுகளின் கல்வி முயற்சிகளுக்கு உதவுவதற்காகவே உருவான ஒரு அமைப்பு யுனெஸ்கோ(UNESCO).

14)கல்லூரிகளுக்கு சுயாட்சி வழங்குமாறு பரிந்துரை செய்த கமிஷன் கோத்தாரி (அ) கல்விக் கமிஷன் (1964 -66).

15) நவோதயா பள்ளிகளில் எத்தனை வகையான பாடப்பிரிவுகள் உள்ளன 4 .

16)தமிழகத்தில் “ஞான தந்தை திட்டம்” தொடங்கப்பட்ட ஆண்டு 1960.

17) டால்டன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. 

18)தகுதி அடிப்படையிலான ஆசிரியர் கல்வியின் வேறு பெயர் செயலாக்க அடிப்படையிலான ஆசிரியர் கல்வி.

19) குறைந்தபட்ச அடிப்படை தகுதிகள் மூன்று வகை3.

20) நவோதயா பள்ளிகள் இன் முக்கிய குறிக்கோள் மீத்திறன் பெற்ற சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தல்.

21) எல்லாவகை கற்றலுக்கும் அவசியமானது குவி சிந்தனை.

 22)பள்ளியின் ஒட்டுமொத்த கட்டமைப்பு சூழல் நிலவுவதை பொருத்தது தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர் உறவு.

23) சமூகத்தில் முதல் முதலில் தோன்றி அமைப்பு குடும்பம்.

24) பள்ளி கலை திட்டத்தில் மதிப்பு கல்வியை சேர்க்கப்பட வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்திய கல்வி கொள்கை 1986 தேசிய கல்வி கொள்கை .

25)மனித சமுதாயத்தில் ஒட்டுமொத்தமான மதிப்புகளின் வெளிப்பாடு சமயம்.

26) கல்வி நுட்பவியல்  மின் சாதனங்களுக்கு அடிப்படை உளவியல் கோட்பாடுகள் ஸ்கின்னர் .

27)கோட்பாட்டில் மைய இடம் வகிக்கும் கருத்து வலுவூட்டுதல்.

 28)திட்டமிட்டு கற்றல் என்ற தனிநபர் கற்றல் முறை அறிமுகமான வருடம் 1950 .

29)சுய கற்றல் முறை உருவான ஆண்டு 1968

30) ஒரு பொருளை அறிய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கையாளும் செயல்களில் தொகுப்பிற்கு பெயர் ஸ்கீமா .

31)அமெரிக்காவில் மனிதாபிமான பண்புகளை வளர்க்க கூடிய கல்விமுறை லிபரல் கல்வி முறை 

32)நடமாடும் பள்ளி எனும் கருத்தை பரிந்துரை செய்தவர் மெக்டொனால்ட்.

33) சுவரில்லா பள்ளிகள் எனப்படுபவை நடமாடும் பள்ளிகள்.

34) முற்போக்கு கல்வியின் தந்தை எனப்படுபவர் யார் பிரான்சிஸ் பார்க்கர்.

35) அனைத்து குழந்தைகளும் அவர்களுக்கு மிக அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து பயில வேண்டும் என்பதே அடிப்படைக் கருத்தாக கொண்டவை அண்மைப் பள்ளிகள்.

36) இந்தியாவில் 1962 இல் முதன் முதலில் தொலை கல்விக்காக அஞ்சல் வழி துறை தொடர் கல்வி நிறுவனத்தை தோற்றுவித்தது தில்லி பல்கலைக்கழகம்.

37) தனிநபர் வேறுபாடுகளை உளவியல் சோதனைகள் மூலம் அளவிட்டவர் கேட்டல்.

38) சிறு குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமான உளவியல் முறை உற்று நோக்கல் முறை.

39) தனியாள் வரலாற்று ஆய்வு முறையின் மற்றொரு பெயர் மருத்துவமுறை.

40) வினா வரிசை முறையை முதன்முதலில் உளவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய உளவியல் அறிஞர் பிரான்சிஸ் கால்டன்.

41) ஒருவனிடம் இடம்பெற்றுள்ள பிறப்பினால் தோன்றிய தனித்தன்மைகள் ஒட்டுமொத்த நிலை மரபுநிலை.

42) ஒவ்வொரு குரோமோசோமில் உள்ள மரபுக் கூறுகளை சுமந்து செல்பவை ஜீன்கள் .

43)ஒரு குழந்தையின் குணநலன்களில் அதன் எத்தனை தலைமுறை மூதாதையர்களின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 8

44) ஆங்கில குடும்பங்களின் மேதைகள் உறவினர்களை ஆராய்ந்து மரபின் முக்கியத்துவத்தை கூறியவர் கால்டன்.

45) மனித வளர்ச்சியில் சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எரிக்சன் 8 வளர்ச்சி நிலைகளை கூறுகின்றார்.

46) சமூக மரபை குழந்தைகள் தனதாக்கிக் கொள்ளும் முறைக்கு சமூக நெறிப்படுத்துதல் என்று பெயர்.

47) உலகத்தோடு இணைந்து வாழ்வு வாழ உதவுவதே கல்வி எனக் கூறியவர்? தாகூர்

48) கல்வி உரையாடல் மூலம் கல்வி எனும் கருத்தினை முதலில் அறிமுகப்படுத்திய நாடு கிரேக்கம்

49) பள்ளி செயல்களில் அதிக ஈடுபாடு காட்டும் குழந்தைகள் மீத்திறன் குழந்தைகள்.

50) பிரார்த்தனை சமாஜம் எனும் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1867

51) சமய கல்வியின் குறிக்கோள் நல்ல பழக்கங்களை வளர்த்தல்.

52) கல்வி திட்டத்தில் குறையை போக்க உதவும் செயல் என்பது கருத்தரங்கு  குழு ,ஆய்வு.

 53)இந்திய அரசியலமைப்பின் 45 ஆவது பிரிவு வலியுறுத்துவது இலவச கட்டாய கல்வி.

54) மகாத்மா காந்தியை தமது வார்தா கல்விக் கொள்கையை பற்றி எந்த பத்திரிகையில் எழுதினார் ஹரிஜன்.

55) ஒரு கல்வி ஆண்டிற்கான முழு பாடத்திட்டத்தையும் வகுக்க உதவுவது ஆண்டு திட்டம் .

56)பாண்டிச்சேரியில் ஆசிரமம் அமைத்து கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் அரவிந்தர்

57) இந்தியக் கல்வியின் நிர்வாக வளர்ச்சி வரலாறு உட் அறிக்கை 1854.

58) இந்திய பல்கலைக்கழகங்களின் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது 1904.

59) இந்தியாவில் கல்வி என்பது சம உரிமை.

60) உளவியலின் முதல் நூல் ஆன்மாவின் இயல்பு.

61) கல்வி திட்டத்தை முன்மொழிந்தவர் மகாத்மாகாந்தி.

62) எதையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றலின் பெயர் நுண்ணறிவு 

63)திட்ட வளர்ச்சியில் ஒன்று மதிப்பிடுதல் 

64)தார்ண்டைக்கின் பொதுவிதிகள் ஆயத்த விதி, பயிற்சி விதி, பயன்பாடு  விதி.

65) மாணவரின் விடை சரியானது என உடனே அறிந்திடுதல் ஊக்கம் அளித்தல் ஆகும்.

66) கல்வி இயல் அறிஞர் பாவ்லோ  என்பவர் ஒரு ரஷ்ய அறிஞர்.

67) அனுபவக் கல்வி என்பது நேர்முக அனுபவம் வாயிலாக பெறும் கல்வி.

68) எந்த கல்வி முறை மிகுந்த பயனைத் தரவல்லது மாணவர் மையக் கல்வி.

69) கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஜப்பான் மாணவர்கள்.

70) ராதாகிருஷ்ணன் குழு திட்டம் எதனுடன் தொடர்புடையது பல்கலைக்கழக கல்வி.

71) அறிவியல் அறிஞர் ரோர்ஷாக் எந்த நாட்டை சேர்ந்தவர் சுவிட்சர்லாந்து

72) தேசிய எழுத்தறிவு இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு 1988 

73)நவோதயா பள்ளிகளை நிர்வகிப்பது மத்திய அரசு 

74)இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட இடம் கொல்கத்தா.

75) பண்டைய குருகுல கல்வியில் தரப்பட்ட கல்வி சமயக் கல்வி, பிராமணக் கல்வி.

76) நேரு அறிவியல் மையம் உள்ள இடம் மும்பாய்.

77) முதியோர் கல்வி எனும் கருத்தினை முதலில் அறிமுகப்படுத்திய நாடு ரஷ்யா.

78) அஞ்சல் வழிக்கல்வி மூலம் பாடங்களை ஒளிபரப்பும் தமிழகப் பல்கலைக் கழகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .

79)குழந்தை மையக் கல்வி எப்படி அமைய வேண்டும் செயல்களின் அடிப்படையில்.

80) கரும்பலகை திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட ஆண்டு( 1987- 88)

81) எதையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றிலே நுண்ணறிவு என்றவர் ஆல்பிரட் பீனே .

82)பெண்களின் எழுத்தறிவு வீதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் ராஜஸ்தான்.

83) லெனின் பல்கலைக்கழகம் உள்ள நாடு ரஷ்யா

84) உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படும் நாள் செப்டம்பர் 8.

85) ஆரம்ப காலத்தில் இந்திய நாட்டின் மொழிக்கொள்கை மும்மொழிக் கொள்கை.

86) வினா-விடை என்னும் நூல் திறன் மூலம் கற்பித்தலை வலியுறுத்தி அறிஞர் சாக்ரடீஸ்.

87) இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில்தான் உள்ளது எனக்கூறியவர் காந்தி.

88) குழந்தைகளின் விரும்பத்தகாத செயல்களை திருத்த பயன்படுவது தண்டனை முறை.

89) மாணவர்கள் கற்றுக் கொள்ள பெரிதும் உதவிகரமாக இருப்பது ஆசிரியர் தரும் ஊக்குவிப்பு. சிறந்த அடிப்படையாக அமைவது நல்லாசிரியரின் உறுதுணை.

90) ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் கல்வி

Leave a Comment