சித்த மருத்துவ குறிப்புகள்: செம்பருத்தி பூவின் பயன்கள்,&தாமரை பயன்கள் - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: செம்பருத்தி பூவின் பயன்கள்,&தாமரை பயன்கள்

  சித்த மருத்துவ குறிப்புகள்: செம்பருத்தி பூவின் பயன்கள்,&தாமரை  பயன்கள் .

செம்பருத்தி பூவின் பயன்கள்

செம்பருத்தி பூ மற்றும் இலையை ,வெள்ளரி சாறு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தாகம் தீரும் .

செம்பருத்தி பூவை மென்று தின்று, மோர் குடித்தால் அடிக்கடி பேதியாவது நிற்கும்.

 செம்பருத்தி பூவுடன், சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், தலைசுற்றல், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

 செம்பருத்திப் பூவுடன், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்த சுத்தி உண்டாகும் .தோல் நோய்களும் குணமாகும்.

 செம்பருத்தி பூவை தண்ணீரில் போட்டு ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து, அந்த தண்ணீரோடு செம்பருத்திப்பூவை அரைத்து சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும், மாநிறமும் கிடைக்கும்.

 செம்பருத்திப் பூக்களை தலையில் வைத்து படுத்துக் கொண்டால் பேன், பொடுகு தொல்லை தீரும் செம்பருத்திப் பூக்களை அரைத்து எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காகும் செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி கருமையாக மாறும் செம்பருத்தி பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும் தாமரை  பயன்கள் தாமரைப்பூ ஆவாரம் பூ செம்பருத்திப் பூ மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் இதய நோய் குணமாகும் தாமரை விதை பருப்பை வெந்நீரில் அரைத்து சாப்பிட்டால் விக்கல் மறையும் தாமரை இலை விஷ்ணுகிராந்தி இலை இரண்டையும் தலா ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக அரைத்து மாதவிலக்கான இரண்டாம் நாளில் பாலில் கலந்து குடித்து விட்டு திராட்சைப்பழம் 20 சாப்பிடவும் இப்படி தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டால் கர்ப்பவாய் சூதக வாயு வயிற்று வலியும் நீங்கி கரு உண்டாகும் தாமரை இலை சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி சுண்ட காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் இதயம் பலப்படும்

Leave a Comment