மகளிருக்கான மருத்துவ குறிப்புகள்:
பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் சிறுநீரக கோளாறும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை .
- அடிக்கடி சிறுநீர் செல்வது,
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்,
- அரிப்பு,
- முதுகு வலியும் காணப்படும், மேலும் இந்த நோய் அதிகமானால் சிறுநீரில் ரத்தம் துளிகளும் காணப்படும், வெப்பம் அதிகமாகும், சிறுநீர் துர்நாற்றம் வீசும்,
மேற்கண்ட அடையாளங்களே சிறுநீரக கோளாறுகளை சொல்லிவிடும். பெண் உறுப்பில் மிக சுலபமாக தொற்று நோயை உண்டாக்குகிறது. இந்த தொற்று நோய், சிறுநீரகத்திற்கும், அதையொட்டிய உறுப்புகளுக்கும் கொண்டு செல்வதால் பெண் உறுப்பின் கீழ் பகுதிகள் கர்ப்பப்பை ஆகியவை மாதவிடாய் காலங்களில் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணரவேண்டும் மேற்கண்ட அடையாளங்களை கண்டதும் மருத்துவரை அணுகி தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களின் காரணங்களை அறிந்து அதற்கேற்ப வைத்தியம் செய்து கொள்வது நல்லது. சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட பெண் தனது சிறுநீரை எடுத்து சோதனை செய்து அதில் உள்ள கிருமிகளின் தன்மையை உணர்ந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். சில பெண்கள் இந்த நோய் வந்தால் வெளியே சொல்லவே பயப்படுவார்கள்,கூச்சப்படுவார்கள், இது தவறு.
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், காலை தன் இருக்கையில் அமர்ந்தால் மாலையில் தன் இருக்கையிலிருந்து சிறுநீர் கழிக்க போகமாட்டார்கள் இது மிகவும் தவறு. சிறுநீரை கழித்து விடவேண்டும். இயற்கையின் செயல்பாடு இது. எனவே சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது இருந்து விடுவது நல்லது.
- சிறுநீரக கோளாறு உள்ள பெண்கள் அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
- இளநீரை பருகுவது நல்லது.
- காய்கறி ,கீரைகளில் நீர் உள்ளவைகளை சமைத்து உண்பது நோய் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
வயிற்றுப் புண் அல்லது குடல் புண் அல்லது அல்சர்:
பெரும்பாலான பெண்களை பாதிக்கச் செய்யும் நோய் குடல் புண் .குடல் புண் வந்தால் பாதி குறைந்து காணப்படுவார்கள். மனதில் நிம்மதி இருக்காது.
நோயின் அடையாளங்கள்:
- அடிக்கடி வயிறு வலிக்கும், சில சமயங்களில் வாந்தி கூட வரும் .
- நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டு ஏதோ அடைப்பது போல இருக்கும்.
- பசி நேரத்தில் வயிற்றைப் பிசையும்.
- இருதயத்தில் அவ்வபோது படபடப்பு ஏற்படும்.
- எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்து கொண்டே இருக்கும்.
நோய்க்கான காரணங்கள் :
- சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது.
- காலை உணவைத் தவிர்ப்பது.
- அடிக்கடி கவலைப்படுவது.
- அதிக காரமான மசாலா உணவுகளை உண்பது.
- அவசர அவசரமாய் உண்பது.
இக் காரணங்களால் குடலில் புண் ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் அதிக வலியை தரும் .இது சாப்பிட்டவுடன் மெல்ல அடங்கும். மறுபடியும் கிளர்ந்து எழும் .
நோயை சரிசெய்ய வழிமுறைகள் :
- சரியான நேரத்தில் உண்பது.
- புளி, காரத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
- காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவது.
- மோர் ,இளநீர் போன்ற பானங்களை அருந்துவது.
- தினமும் கீரையை உண்பது .
- மனதை தியானத்தின் மூலம் அமைதியாக வைத்திருப்பது.
இவைகளே கடைபிடித்தாலே வயிற்றுப்புண் தானாகவே மறைந்துவிடும்