+2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல்-பதிவிறக்கம்:முதன்மைக் கல்வி அலுவலர். - Tamil Crowd (Health Care)

+2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல்-பதிவிறக்கம்:முதன்மைக் கல்வி அலுவலர்.

+2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல்-பதிவிறக்கம்:முதன்மைக் கல்வி அலுவலர்.

 மே-2021 மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 22.03.2021 பிற்பகல் முதல் 01.04.2021 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இணையதளத்திற்கு (www.dge.tn.gov.in) சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பெயர்ப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், மேல்நிலை இரண்டாமாண்டு பள்ளி மாணவர்களின் விவரங்கள் அடங்கிய, Excel Format-ல் உள்ள பெயர்ப்பட்டியலினை (Nominal Roll) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் 22.03.2021 பிற்பகல் முதல் 01.04.2021 வரையிலான நாட்களில் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள User id மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம்  (Download) செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Leave a Comment