கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் - மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்: - Tamil Crowd (Health Care)

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் – மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்:

 கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் – மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்:

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டின் பெரும்பாலான நாட்கள் பொதுமுடக்கமாக தான் கழிந்தன. 2020 மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருடத்தின் பாதி நாட்களை எடுத்துக் கொண்டது. அதன்பிறகு நோய் தொற்று வெகுவாக குறைந்த பிறகு மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் அடைந்த கஷ்டத்திற்கு அளவே இல்லை. பலரும் உயிரை விடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இப்படி கோர முகத்தை கொண்ட கொரோனா பொதுமுடக்கம் முடிவுக்கு வந்த பிறகு தான் ஏழை, எளிய மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனாவை எதிர்கொண்ட அனுபவம் அனைத்து மாநிலங்களுக்கும் இருப்பதால், நோய் பரவலை திறம்பட கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும், அதனால் மாநில அரசுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் தற்போது வரை ஊரடங்கு குறித்து எந்த அறிவுறுத்தலும் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

Leave a Comment