கொரோனா பரவல் :கபசுர குடிநீர் வினியோகத்தை தீவிரப்படுத்த சித்தமருத்துவர்கள் வலியுறுத்தல் - Tamil Crowd (Health Care)

கொரோனா பரவல் :கபசுர குடிநீர் வினியோகத்தை தீவிரப்படுத்த சித்தமருத்துவர்கள் வலியுறுத்தல்

 கொரோனா பரவல் :கபசுர குடிநீர் வினியோகத்தை தீவிரப்படுத்த சித்தமருத்துவர்கள் வலியுறுத்தல்.

கொரோனா அலை வந்துவிட்டது என்று மற்ற மாநிலங்களில் ஜனவரி மாதமே சொல்லத் தொடங்கிவிட்டாலும், தமிழகத்தில் இப்போதுதான் அலை பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

கபசுர குடிநீர்:

மற்ற மாநிலங்களில் முன்கூட்டியே இரண்டாவது அலை உண்டான போதும், தமிழகத்தில் நிலைமை மோசமடையாமல் இருப்பதற்கு காரணம், கபசுர குடிநீர்தான் என்று சொல்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

டாம்ப்க்கால் நிறுவனம்:

கடந்த ஆண்டு 400 டன் கபசுர குடிநீர் சூரணம்  தயாரித்து கொடுத்துள்ளதாகவும், தற்போதும் போதுமான அளவு தயாரித்து வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.- டாம்ப்க்கால் நிறுவனம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, அரசு மருத்துமனைகள், முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் கபசுர குடீநீர் வழங்கபட்டதால், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது. அதுபோலவே கொரோனா வைரசின் பரவல் சற்று அதிகமாகவே இருக்கும் சூழலில், கபசுர குடிநீர் வினியோகத்தினை தீவிரப்படுத்த வேண்டும். என்று வலியுறுத்தி இருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

Leave a Comment