அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கு-தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு. - Tamil Crowd (Health Care)

அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கு-தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு.

 அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கு-தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு.

அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கு :

மார்ச் 20: அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பை எதிர்த்து வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கோபிநாத் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி கடந்த பிப்ரவரி 25 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். போதிய வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் வறுமையில் தள்ளப்படுவர். எனவே ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசு ஆணையை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ,ஆனந்த் ஆகியோர் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Leave a Comment