'உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் ஏற்படும் -சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. - Tamil Crowd (Health Care)

‘உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் ஏற்படும் -சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ‘உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் ஏற்படும் -சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) உள்ள பெண்கள் எடை கட்டுப்பாட்டுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் நல்ல தூக்கம் இருந்தால் பெண்களின் உடல் எடை அதிகரிக்காது. அந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் மாற்றம் மட்டுமின்றி தூக்கக் கலக்கம் ஏற்படுவதும் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் என்று முன்னணி ஆய்வாளர் லீலா கிராண்ட் தெரிவிக்கிறார்.

இதனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் நன்றாக தூங்க வேண்டும் என்றும் இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிற அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் நின்ற வயதில் பெண்களில் உடல் பருமன் பொதுவாக அதிகரிக்கும். மாதவிடாய் தொடர்பான எடை அதிகரிப்புக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நிறுத்தப்படுவதே காரணம். ஆனால், இந்த சமயத்தில் பெண்களில் 50% பேர் மட்டுமே எடை அதிகரிக்கின்றனர், எஞ்சிய 50% பெண்களின் உடல் எடை அதிகரிப்புக்கு தூக்கமின்மை, வளர்ச்சிதை மாற்றம் என பல காரணங்கள் உள்ளன.

மேலும் உடல் பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் நீரழிவு நோய் உள்ளிட்ட பிற பிரச்னைகள் தொற்றிக்கொள்ளும் என்பதால் பெண்கள் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

Leave a Comment