தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு – நீதிமன்ற உத்தரவு எப்போது நிறைவேற்றப்படும்?
”தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்,” என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
- பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்.
- தபால் ஓட்டுகள் சென்றடைவதில் சிரமம் உள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் இடத்தில் சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.
- தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மரணம், பாதிப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
- ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டாரத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
- தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பிற்கு முன் இத்தீர்ப்பு வழங்கியதால் இதற்கு தமிழக அரசு அரசாணை வழங்க வேண்டும், என்றார்.