பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். - Tamil Crowd (Health Care)

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்படும்.

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்படும் – மகாராஷ்டிரா அரசு.

‘கொரோனா தாக்கத்தினால் மாநிலத்தில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வின்போது கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்’ என மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை அங்கு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை கல்வி அமைச்சர் உறுதி செய்துள்ளார். இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு அவரவர் படிக்கின்ற பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் என சொன்னதையும் அவர் உறுதி செய்தார்.

அதன்படி 80 மார்க் கொண்ட தாள்களுக்கு கூடுதலாக 30 நிமிடங்களும், 40 மார்க் கொண்ட தாள்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்களும் நேரம் கொடுக்கப்படும் என அந்த மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வையும் அரசு நடத்த உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.

Leave a Comment