அடுத்த முதல்வராக ஸ்டாலின் வருவதற்கு 37.51% பேர் விருப்பம்: கருத்துக்கணிப்பு முடிவு. - Tamil Crowd (Health Care)

அடுத்த முதல்வராக ஸ்டாலின் வருவதற்கு 37.51% பேர் விருப்பம்: கருத்துக்கணிப்பு முடிவு.

 அடுத்த முதல்வராக ஸ்டாலின் வருவதற்கு 37.51% பேர் விருப்பம்: கருத்துக்கணிப்பு முடிவு.

புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு :

திமுக தலைவர் ஸ்டாலினே அடுத்த முதல்வராக வரவேண்டும் என 37.51% பேர் விருப்பம் தெரிவித்துள்ளது புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 37.51% பேர் ஸ்டாலினே முதல்வராக வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி – 28.33%, கமல்ஹாசன் – 6.45%, சீமான் – 4.93%, சசிகலா – 1.33% பேர் என தெரிவித்துள்ளனர்.

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததற்கு முன்பே இந்தக் கருத்துக் கணிப்பு மக்களிடம் நடத்தப்பட்டதால், அவரது பெயரும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment