தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு வயது 61 ஆக உயர்வு. - Tamil Crowd (Health Care)

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு வயது 61 ஆக உயர்வு.

 தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு வயது 61 ஆக உயர்வு. 

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதுடன், அவர்களின் பணி ஓய்வு வயது 58 லிருந்து 61 ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

 தெலுங்கானா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்:

 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை  குறித்த விவாதத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் சியதாவது:தெலுங்கானாவில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஊழியர் ஊதிய ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்படுத்தப்படுகிறது.

  •  வரும் நிதியாண்டில் ஏப்ரல் முதல் தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவீத ஊதிய உயர்வு அமல் படுத்தப்படும் .
  • அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள், ஓய்வு ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 9 லட்சத்து 17 ஆயிரத்து 797 பேர் பயனடைவார்கள்.
  •   அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 58 லிருந்து 6 1 ஆக உயர்த்தப்படுகிறது.
  •  இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
  •  61 வயதை அடைந்தவர்கள் ஓய்வு பெறும்போது காலி இடத்தில் இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
  •  ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெறும் வயது 75 லிருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  •  பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 180 நாட்களுக்கு வழங்கப்படும்.

 இவ்வாறு சந்திரசேகரராவ் அறிவித்தார் இதற்கான அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

Leave a Comment