அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்-சென்னை வானிலை ஆய்வு மையம். - Tamil Crowd (Health Care)

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்-சென்னை வானிலை ஆய்வு மையம்.

  அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்-சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது நிகழ்ந்து வரும் காற்றின் சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காற்றின் சுழற்சி ஒரு கி.மீ உயரம் வரையில் நிலவி வருவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெய்யிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளது.

Leave a Comment