தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படை-சத்யபிரத சாஹு. - Tamil Crowd (Health Care)

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படை-சத்யபிரத சாஹு.

 தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படை-சத்யபிரத சாஹு.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பாதுகாப்புக்கு ஏற்கெனவே 65 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ள நிலையில், மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படையினரை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர் தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை கரோனா பரவலுக்கு இடையில் தேர்தல் நடைபெறுவதால், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடிகளின் எண் ணிக்கையும் 68,324 என்பது 88,947 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்காளர்கள் எண்ணிக்கையும் தற் போது 3 லட்சம் அளவுக்கு உயர்ந் துள்ளதால், அதற்கேற்ப பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 26 லட்சம் வாக்காளர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்பட்டு, அந்த வசதியை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்த விருப் பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, முந் தைய தேர்தல்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அடிப்படையில் செலவின கவனம் பெற்ற மாநிலமாக உள்ளது. குறிப்பாக 118 தொகுதிகள், மேலும் பல்வேறு வாக்குச்சாவடிகள் செல வின சிறப்பு கவனம் பெற்ற பகுதி களாக கண்டறியப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு, தமிழகத்துக்கு செலவின சிறப்பு பார்வையாளர்களும் நியமிக் கப்பட்டுள்ளனர். அத்துடன், செலவின கவனம் பெற்ற தொகுதிகளில் கூடு தலாக துணை ராணுவப்படையினரை பணியமர்த்தவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே 65 கம்பெனி அதாவது ஒரு கம்பெனிக்கு 100 முதல் 110 வீரர்கள் கொண்ட துணை ராணுவப்படையினர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். தற்போது கூடுதல் படையினர் தமிழகம் வர உள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

தமிழகத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக நாங்கள் 330 கம் பெனி துணை ராணுவப்படை கேட்டிருந் தோம். ஆனால் தற்போது 235 கம்பெனி துணை ராணுவப்படையினரை

அனுப்ப தேர்தல் ஆணையம் முடி வெடுத்து அறிவித்துள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போதும் 300 கம்பெனிகள் தமிழகம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படையினர், வருமானவரித் துறையினர் இணைந்து கடந்த மார்ச் 22-ம் தேதி வரை ரூ.265.25 கோடி மதிப்பு பணம், பொருட்களை கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக, பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர், காவல் துறையினர் ரூ.72.41 கோடியும் வருமானவரித் துறையினர் ரூ.42.61 கோடி என ரூ.115.02 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

இதுதவிர ரூ.1.87 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.1.46 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.130.33 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.1.78 கோடி மதிப்பு வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்பு இதர உலோகங்கள், ரூ.14.96 கோடி மதிப்பு துணி, வெளிநாட்டு பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த 21-ம் தேதி ரூ.232.62 கோடியாக மொத்த பறிமுதல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment