புதிய வகை இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
புதிய வகை இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தீவிர தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில், கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் வேகம் எடுக்கத் தொடங்கி மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசின் மரபியலை கண்டறிய தேசிய ஆய்வகங்களில் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் இரட்டை உருமாறிய கொரோனா பரவல் இந்தியாவில் 18 மாநிலங்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிகரித்துள்ள நிலையில், வரப்போகும் பல்வேறு பண்டிகை காலங்களில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை மாநிலங்கள் உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.