வங்கிகளுக்கு வரும் 27-ம் தேதிமுதல் ஏப்.4-ம் தேதி வரை 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக வங்கி அதிகாரிகள்- விளக்கம் - Tamil Crowd (Health Care)

வங்கிகளுக்கு வரும் 27-ம் தேதிமுதல் ஏப்.4-ம் தேதி வரை 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக வங்கி அதிகாரிகள்- விளக்கம்

வங்கிகளுக்கு வரும் 27-ம் தேதிமுதல் ஏப்.4-ம் தேதி வரை 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக வங்கி அதிகாரிகள் விளக்கம்.

பொதுத் துறை மற்றும் தனியார்வங்கிகள், வரும் 27-ம் தேதி முதல்ஏப்.4-ம் தேதி வரையிலான 9 நாட்களில், 2 நாட்கள் மட்டுமே செயல்படும். மற்ற நாட்கள் விடுமுறை என சமூகவலை தளங்களில்செய்தி பரவி வருகிறது.

இதன்படி, வரும்

  • 27-ம் தேதி 4-வது சனிக்கிழமை,
  •  28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 
  • 29-ம் தேதி ஹோலி பண்டிகை,
  •  31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள், 
  • ஏப்.1-ம்தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் நாள்,
  •  ஏப்.2-ம் தேதி புனித வெள்ளி
  •  4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 

ஆகிய நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி வரும் 27-ம் தேதிமுதல் ஏப். 4-ம் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது:

 “வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். 

  • 29-ம் தேதி ஹோலிபண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வடமாநிலங்களில்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  •  அதேபோல், வரும் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாளன்றும் விடுமுறை கிடையாது.
  • ஏப்.1-ம் தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் தினத்தன்றும்,
  •  2-ம் தேதி புனிதவெள்ளியை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.
  •  3-ம் தேதி, முதல் சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். 
  • மறுநாள் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும்.

எனவே, சமூக வலைதளங் களில் பரவுவதைப் போல வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறை என்ற தகவல் தவறானது’’ என்றனர்.

Leave a Comment