தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு.
தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடரப்படும் என அறிவிக்கை வெளியிடத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசிற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதியத்துடன் விடுமுறை வழங்கவில்லை என்று சேலம் அகமது ஷாஜகான் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.