சித்த மருத்துவ குறிப்புகள்: அகத்திக் கீரையின் பயன்கள் . - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: அகத்திக் கீரையின் பயன்கள் .

 சித்த மருத்துவ குறிப்புகள்: அகத்திக் கீரையின் பயன்கள்

அகத்திக்கீரை.

  •  அகத்திக்கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
  •  அகத்திக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
  •  அகத்திக்கீரை வேகவைத்த தண்ணீரில், தேன் கலந்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
  •  அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால், இரண்டே நாளில் வாய்ப்புண் குணமாகும்.
  •  அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தினமும் 8 கிராம் அளவுக்கு சுடு நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.
  •  அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம்,மயக்கம், தலை கிறுகிறுப்பு, வாந்தி போன்றவை குணமாகும்.
  •  அகத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
  •  அகத்தி பட்டையை கஷாயம் வைத்து குடித்தால் மலேரியா  குணமாகும்.
  •  அகத்திப்பூ சாறு எடுத்து குடித்து வந்தால் கண்பார்வை பிரகாசமடையும்.
  •  அகத்தி கீரை சாற்றை குடித்து வந்தால் வீக்கம், வாயு பிடிப்பு போன்றவை குணமாகும்.
  •  அகத்திக்கீரை சாறு குடித்து வந்தால் பித்த மயக்கம், வாந்தி குணமாகும்.
  •  அகத்திக் கீரை ,மணத்தக்காளிக் கீரை, முட்டைகோஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் குணமாகும்.
  •  அகத்திக்கீரை, தேங்காய் துருவல் சேர்த்து அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
  •  அகத்திக்கீரை சாற்றுடன், துவரம் பருப்பு 100 கிராம் ,மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சேர்த்து தினமும் சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.
  •  அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும், தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.
  •  அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாள்களுக்கு சாப்பிட்டு, மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.
  •  அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். பிறகு, அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.
  •  அகத்திக்கீரையுடன், மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால் கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் குணமாகும்.
  •  அகத்திக்கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை விரைவில் உதிர்ந்துவிடும் .
  • அகத்திக்கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும்.
  •  அகத்திக்கீரை, வெந்தயம் ஊற வைத்தது ,இரண்டையும் சேர்த்து அரைத்து அடை போல் தட்டி காய வைத்து நல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்து அதை தினமும் உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும்.
  •  அகத்திக் கீரை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் பித்தம் தணியும் .
  • அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும் .
  • அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்துவிட்டால் காய்ச்சல் குணமாகும்.

Leave a Comment