சித்த மருத்துவ குறிப்புகள் :அருகம்புல்லின் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள் :அருகம்புல்லின் பயன்கள்:

 சித்த மருத்துவ குறிப்புகள் :அருகம்புல்லின் பயன்கள்:

 அருகம்புல்.

  • அருகம்புல் வேரை காய வைத்து பொடி செய்து ஒன்றுக்கு ஐந்து மடங்கு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்தி உடலில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் வராது.
  • அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.
  • அருகம்புல்லை ஒரு கட்டு, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பால் மற்றும் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சிறுநீர்ப்பை உறுதிப்படும்.
  •  அருகம்புல்லை ஒரு கைப்பிடி இடித்து சாறு எடுத்து ,வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்துமா ,சளி, சைனஸ், நீரிழிவு போன்றவை குணமாகும்.
  •  அருகம்புல், ஆலமர இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனே குணமாகும்.
  •  அருகம்புல், தூதுவளை வேர் ,இரண்டையும் கசக்கி சாறு எடுத்து குடித்தால் பல்வலி குணமாகும்.
  •  அருகம்புல்லை சாறு பிழிந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
  • அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் வைத்து குடித்தால் நெஞ்சுவலி குணமாகும்.
  •  வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு ஒரு கப் குடித்து வந்தால் உடல் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
  •  அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
  •  அருகம்புல், கடுக்காய்,  கிரந்திதகரம், கஞ்சாங்கோரை அனைத்தையும் சம அளவு எடுத்து மோர் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் கொண்டால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவை மறையும் .
  • அருகம்புல், துத்தி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும்.
  •  அருகம்புல் வேரை, வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் குணமாகும்.

Leave a Comment