சித்த மருத்துவ குறிப்புகள்: ஆடாதோடா பயன்கள்:
ஆடாதொடை.
- ஆடாதொடை இலையை நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
- ஆடாதொடை இலையை அரைத்து சாறெடுத்து அதில், தேன் கலந்து குடித்தால் இருமல் மற்றும் சளி உடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
- ஆடாதொடை இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் குடித்தால் (50) மில்லி காச நோய் குணமாகும்.
- ஆடாதொடை இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும் .
- ஆடாதொடை இலையை பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு ,மஞ்சள் காமாலை குணமாகும்.
- ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை தீரும்.
- ஆடாதொடா இலையை பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
- ஆடாதொடா இலையை பொடி செய்து, புகைப்பிடித்தால் இறைப்பு நோய் குணமாகும்.
- ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் சம அளவு எடுத்து மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும்.
- ஆடாதொடை பூவை வதக்கி கண்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.
- ஆடாதொடா வேரை கசாயம் வைத்து குடித்தால் அனைத்து விதமான உடல் வலிகளும் குணமாக்கும்.
- ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி பொடி மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
- ஆடாதொடா இலை சாற்றை, கடுக்காய் சேர்த்து கஷாயம் காய்ச்சி அதில் தேன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
- ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் இரைப்பு இருமல் குணமாகும்.