சித்த மருத்துவ குறிப்புகள்: ஆமணக்கு பயன்கள்:
ஆமணக்கு
- ஆமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .
- ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டிகள் பழுத்து உடையும்.
- ஆமணக்கு இலையை வதக்கி கட்டினால் கை கால்களில் உண்டாகும் வீக்கம் தணியும்.
- ஆமணக்கு வேரை அரைத்து சாப்பிட்டால் குடல் கிருமிகள் போன்றவை ஒழியும்.
- ஆமணக்கு விதை பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தீராத மலக்கட்டு குணமாகும்.
- ஆமணக்கு எண்ணெயுடன், கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் மூல நோய்கள் அனைத்தும் தீரும்.
- ஆமணக்கு இலை, துத்தி இலை, முல்தானிமட்டி ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து வாழைப்பூ சாற்றில் குழைத்து வயிற்றுப்பகுதியில் பற்றுப்போட்டால் தளர்ந்த வயிறு இறுகும்.
- ஆமணக்கு இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சம் பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
- ஆமணக்கு விதை, பருப்பு ,பூண்டு, கலர்ச்சிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வீக்கம் குணமாகும்.
- ஆமணக்கு விதை பருப்பை ஒன்றிரண்டாக தட்டி போட்டு துணியில் சுற்றி சட்டியில் போட்டு சூடாக்கி ஒத்தடம் கொடுத்தால் வயிற்றுவலி, கல்லடைப்பு ,சதையடைப்பு, நீரடைப்பு, வீக்கம் போன்றவை குணமாகும்.
- ஆமணக்கு எண்ணெய்யை தினமும் ஐந்து சொட்டுகள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் ஏற்றம் ,காது, மூக்கு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
- ஆமணக்கு எண்ணெயை அடிக்கடி மார்பக காம்புகளில் பூசி வந்தால் புண் மற்றும் வெடிப்புகள் விரைவில் ஆறும் .
- மலசிக்கல் உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தினமும் ஆசன வாயில் தடவினால் மலம் எளிதில் வெளியாகும்.