மருத்துவ குறிப்பு: வாய்ப்புண் குணமாக:
வாய்ப்புண் குணமாக
- அகத்திக் கீரை ,மணத்தக்காளிக் கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் இரண்டே நாளில் வாய்ப்புண் குணமாகும்.
- அகத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
- அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, முட்டைகோஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் குணமாகும்.
- ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்.
- கரிசலாங்கண்ணிக் கீரை சாற்றில் 30 மில்லி நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
- காட்டு ஏலக்காயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, பல் ஈறு போன்றவை குணமாகும்.
- கொய்யா பூவை கசாயம் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
- நாவல் மர இலையை (ஐந்து) தண்ணீரில் (அரை லிட்டர் )போட்டு கசாயம் காய்ச்சி குடித்தால் வாய்ப்புண், வாய் வேக்காடு குணமாகும்.
- நெல்லிக்காய் சாறு, திப்பிலி பொடி, தேன் மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
- வெள்ளரி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாய்ப்புண், தொண்டை புண் ஆறும்.
- மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். வாய் துர்நாற்றமும் தீரும்.
- மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி) மாசிக்காயை (ஒன்று) சேர்த்து கசாயம் வைத்து குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும் .
- புளியாரைக் கீரையுடன், வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.