செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. - Tamil Crowd (Health Care)

செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

 செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை-  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

 பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டது.

தற்பொழுது தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும், செய்முறை தேர்வுகளை 31-ம் தேதிக்குள் நேரடியாக நடத்தி முடிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment