சித்த மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் பயன்கள்|: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் பயன்கள்|:

  சித்த மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் பயன்கள்|:

  •  வெங்காயத்துடன், துத்தி இலை, மற்றும் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும், மூலச்சூடு தணியும்.
  •  வெங்காயத்தை சுட்டு சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.
  •  வெங்காயத்தை, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.
  •  வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கண், காது சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
  •  வெங்காயத்தை வதக்கி அரைத்து கொப்புளம், காயங்களில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.
  •  வெங்காய சாற்றில், கடுகு எண்ணெய் கலந்து தடவி வந்தால் மூட்டு வலி நீங்கும்.
  •  வெங்காயத்துடன், உப்பு சேர்த்து சாப்பிட்டால் மலசிக்கல் நீங்கும்.
  •  வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் பனங்கற்கண்டை சேர்த்து சட்டியில் போட்டு சிவக்க வறுத்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
  •  வெங்காய சாற்றில், தேன் கலந்து குடித்து வந்தால் இருமல், மார்புசளி உள்ளிட்ட மார்பு நோய்கள் நீங்கும்.
  •  வெங்காயத்தை, விளக்கெண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகும், மலச்சிக்கல் வராது.
  •  வெங்காயத்தை அடிக்கடி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் வயிறு மற்றும் கல்லீரல் புண்கள் குணமாகும்.
  •  வெங்காய சாறு, இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு கலந்து குடித்தால் நீரிழிவு நோய் குறையும்.
  •  வெங்காயத்தை சாறு பிழிந்து கண்களில் விட்டால் இழுப்பு உடனே நின்று விடும்.
  •  வெள்ளை வெங்காயத்தை சாறு பிழிந்து இரண்டு காதுகளில் சில சொட்டுகள் விட்டால் காக்காய் வலிப்பு உடனே நிற்கும்.
  •  வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வறுத்து, பனங்கற்கண்டு சேர்த்து துவையல் செய்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூல நோய் தணியும்.
  •  வெங்காய சாற்றை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து உப்பு சேர்த்து நகசுத்தி யில் வைத்து கட்டு போட்டால் விரைவில் பிரச்சனை தீரும்.
  •  வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டை சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  •  வெங்காயத்தை பாலில் வேக வைத்து நன்றாக அரைத்து பருக்கள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.
  •  வெங்காயத்துடன் படிக்காரத்தூள் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
  •  சின்ன வெங்காயத்தை, வெள்ளம் மற்றும் நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் பித்தம் குறையும்.
  •  வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி தேள் கொட்டிய இடத்தில் நன்றாகத் தேய்த்தால் வலி குறையும், விஷமும் இறங்கும்.
  •  வெங்காயம், வசம்பு ,இலுப்பை பட்டை, பாவட்டை இலை- தலா 60 கிராம் எடுத்து தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி தினமும் மூன்று வேளையும் குடித்தால் கரப்பான் என்ற தோல் பிரச்சனை தீரும்.

Leave a Comment