சித்த மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சை பயன்கள் :
எலுமிச்சை பயன்கள்
- எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அதன் தோலின் உட்புறம் வெளியே வரும்படி செய்து முழங்கை, பின் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக தேய்த்து வந்தால் கருப்பு நிறம் மறையும்.
- எலுமிச்சம் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென இருக்கும்.
- எலுமிச்சம் பழச்சாற்றில், தேயிலை தண்ணீரை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
- எலுமிச்சம்பழச் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கண் பிரச்சினைகள் தீரும்.
- எலுமிச்சம் பழச்சாற்றுடன், கடலைமாவு கலந்து வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
- எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை மற்றும் தலை முடியில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும் .
- எலுமிச்சம் பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்றையும் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும் .
- எலுமிச்சம்பழ சாற்றில், தேன் கலந்து குடித்து வந்தால் உடல் வலுப்படும் .
- எலுமிச்சம்பழச் சாறு, தக்காளி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகப்பொலிவு கூடும்.
- எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் மறையும்.
- எலுமிச்சம் பழ சாற்றை தினமும் குடித்து வந்தால் காக்காய் வலிப்பு குணமாகும்.
- எலுமிச்சம்பழத்தை கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண்ணில் நீர் வடிதல் நிற்கும், கண் எரிச்சலும் குணமாகும்.
- எலுமிச்சம்பழ சாற்றில், தேன் கலந்து உதடுகளில் பூசி வந்தால் புதுப்பொலிவு கிடைக்கும்.
- எலுமிச்சம் பழ சாற்றில், லவங்க பொடியை கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
- எலுமிச்சம்பழ சாற்றில், சர்க்கரை கலந்து உடலில் கருமையான இடங்களில் பூசி வந்தால் விரைவில் நிறம் மாறும்.
- எலுமிச்சம்பழச்சாறு, வெள்ளரிக்காய், தக்காளி மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் தோலின் கருப்பு நிறம் மாறும்.
- எலுமிச்சம்பழத்தை, மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.
- எலுமிச்சம் பழச்சாற்றில், தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.
- சுக்கு காபியில், எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் ஜலதோஷம் வராது .
- எலுமிச்சம் பழச்சாறு, வல்லாரைக் கீரை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வெண்புள்ளிகள் மறையும்.
- எலுமிச்சம் இலை கசாயம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- எலுமிச்சம்பழ சாற்றில், உப்பு சேர்த்து குடித்தால் வாந்தி உடனே நிற்கும்.
- எலுமிச்சம் பழச்சாற்றில், கோதுமை மாவை குலைத்து கட்டிகள் போன்றவற்றை மீது தடவினால் அவை விரைவில் மறையும்.
- எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த கொதிப்பு குணமாகும்.
- இளநீரில், எலுமிச்சம் பல சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் போன்றவை குணமாகும்.
- எலுமிச்சம் பழ சாறு, இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் பித்தம் ,தலை கிறுகிறுப்பு குணமாகும்.
- எலுமிச்சம் பழ சாறு, வெங்காய சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
- எலுமிச்சம் பழ சாற்றை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக்கொண்டால் தோலின் கருமை நிறம் மாறும்.
- எலுமிச்சம் பழ சாறு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன் ,எண்ணெய் 2 ஸ்பூன் மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
- எலுமிச்சம் பழ சாற்றை, கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்கு குளித்தால் பேன், பொடுகு நீங்கும்.
- தேங்காய் எண்ணெயில், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
- எலுமிச்சம்பழம் சாற்றை, காபியில் கலந்து குடித்தால் தலைவலி நீங்கும். கசாயம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
- எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.
- எலுமிச்சை இலை, நெல்லி இலை, வேர்க்கடலை இலை மூன்றையும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாகும், வழவழப்பாகவும் மாறும்.
- எலுமிச்சம்பழ சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
- எலுமிச்சம் பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும் .
- எலுமிச்சம் பழச்சாற்றில், மா மர பிசினை குறைத்து காலில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் மீது தடவினால் விரைவில் குணம் கிடைக்கும்.
- பாதாம் பருப்பு பொடி, எலுமிச்சம்பழச்சாறு கலந்து பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக இருக்கும்.
- எலுமிச்சம் பழ சாற்றை, நீரில் கலந்து சேற்றுப் புண்கள் தடவினால் அவை விரைவில் குணமாகும்.
- எலுமிச்சம் பழசாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
- எலுமிச்சம் பழச்சாறு குடித்து வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி மறையும்.
- குளிர்ந்த நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஆப்ப சோடாவை கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே நிற்கும்.
- எலுமிச்சம்பழ சாற்றில் ,மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
- எலுமிச்சம் பழ சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது குடைச்சல் குணமாகும்.