சித்த மருத்துவ குறிப்புகள்: எள்ளின் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: எள்ளின் பயன்கள்:

 சித்த மருத்துவ குறிப்புகள்: எள்ளின் பயன்கள்: 

 எள்ளின் பயன்கள்

  • எள்ளுச் செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு அலசினால் பசை போன்ற திரவம் மிதக்கும் இதனால் கண்களை கழுவினால் கண்களில் உண்டாகும் புண்கள் குணமாகும்.
  •  எள்ளுச் செடியின் இலைகளை கசாயம் வைத்து குடித்தால் சீதக்கழிச்சல் குணமாகும்.
  • எள்ளு எண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் அனைத்து விதமான கிருமித் தொற்றும் குணமாகும், இருமலும் குறையும்.
  • எள்ளு எண்ணையை ,கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் அவை விரைவில் மறையும் .
  • எள்ளு புண்ணாக்கு 50 கிராம், முருங்கை இலை 50 கிராம், வெற்றிலை 5 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கசாயம் காய்ச்சி குடித்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
  •  எள்ளுச் செடியின் இலைகளை வதக்கி  கட்டிகள் மீது வைத்து கட்டினால் அவை விரைவில் பழுத்து உடையும்.
  •  எள்ளுப் பூக்களை பறித்து கண்களில் வைத்துக் கட்டினால் கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  •  எள்ளுப் பூக்களை சுட்டு சாம்பலாக்கி அதை புண்கள் மீது பூசி வந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.
  •  எள்ளைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.
  • எள்ளு இலை அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

Leave a Comment