சித்த மருத்துவ குறிப்புகள்: ஏலக்காய் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: ஏலக்காய் பயன்கள்:

  சித்த மருத்துவ குறிப்புகள்: ஏலக்காய் பயன்கள்:

ஏலக்காய் பயன்கள்

  •  ஏலக்காய் விதை ,ஓமம் ,-சீரகம் தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு 3 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
  •  ஏலக்காய் விதை, சுக்கு, கிராம்பு, சீரகம்- தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும்.
  •  ஏலக்காய், எள்ளு புண்ணாக்கு, முருங்கைக்கீரை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கசாயம் காய்ச்சி குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும், கண்பார்வை தெளிவாகும்.
  •  ஏலக்காய், ஆவாரம்பூ, சுக்கு- தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி குடித்தால் இதய நோய், இதய பலவீனம் போன்றவை குணமாகும்.
  •  ஏலக்காய், தனியா, நெருஞ்சில்- தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
  •  ஏலக்காய், சீரகம்- தலா 50 கிராம் எடுத்து எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து காய வைக்கவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து தேனோடு கலந்து சாப்பிட்டால் தலைவலி, மயக்கம் குணமாகும் .
  • ஏலக்காய் 100 கிராம், பனை வெல்லம் 200 கிராம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து இடித்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் அடிக்கடி உண்டாகும் தலைவலி, மயக்கம் போன்றவை குணமாகும்.
  • ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை ,ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்.
  •  ஏலக்காய், வெள்ளரி விதை- தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நீரடைப்பு மற்றும் கல்லடைப்பு குணமாகும்.

Leave a Comment