சித்த மருத்துவ குறிப்புகள்: கசகசா பயன்கள்:
கசகசா பயன்கள்
- கசகசா 10 கிராம், மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
- கசகசா, பூனைக்காலி விதை – தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
- கொத்தமல்லியுடன், கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
- கசகசா, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு- தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் .இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
- கசகசா விழுதாக அரைத்து 10 கிராம் அளவு காலை மாலை இருவேளையும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் இரத்த பேதி, சீத பேதி போன்றவை குணமாகும்.
- கசகசா, முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும், முகம் அழகு பெறும்.
- கசகசா, ஓமம், மாம்பருப்பு, மாதுளை தோல், சுண்டைக்காய் வற்றல்- தலா 50 கிராம் அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து கெட்டித் தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உள்ளிட்ட அனைத்து வகையான பேதியும் உடனே நிற்கும்.
- கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்று போட்டால் மூட்டு வலி உடனே குணமாகும்.
- கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் அனைத்தையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
- கசகசா ,ஜவ்வரிசி, பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.
- கசகசா, மிளகு ,மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணிக் கீரையில் போட்டு கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும் .
- கசகசாவை, முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல், படை, படர்தாமரை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.
- கசகசாவை, தேங்காய்ப்பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
- மாதுளம் பழச்சாற்றில், கசகசாவை ஊற வைத்து தினமும் ஒரு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு தீர்ந்து சக்தி அதிகரிக்கும்.