சித்த மருத்துவ குறிப்புகள்: கடுகின் பயன்கள்: - Tamil Crowd (Health Care)

சித்த மருத்துவ குறிப்புகள்: கடுகின் பயன்கள்:

 சித்த மருத்துவ குறிப்புகள்: கடுகின் பயன்கள்:

கடுகின் பயன்கள்

  •  கடுகு தேவையான அளவு எடுத்து அரைத்து தொப்புளில் லேசாக பற்று போட்டால் நீர்க்கடுப்பு குறையும்.
  •  கடுகு இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.
  •  கடுகு, உப்பு ,மிளகு- தலா 2 கிராம் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்தால் வாத, பித்த, கப தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
  •  கடுகை நீரில் ஊற வைத்து முளைக்க வைத்து பிறகு அதை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
  •  கடுகை அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் வாந்தி ஏற்படும். தற்கொலை எண்ணத்தில் அல்லது தெரியாமலோ விஷம் குடித்து உயிருக்கு போராடுபவர்களுக்கு கொடுத்தால் காப்பாற்றிவிடலாம்.
  •  கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் பற்றுபோட்டால் காய்ச்சல் ,உடல் சோர்வு நீங்கும்.
  •  கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.
  • கடுகை, தேன் கலந்து சேர்த்து அரைத்துக் கொடுத்தால் மூச்சிரைப்பு, இருமல் குணமாகும்.
  •  கடுகு, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பற்று போட்டால் எப்படி பட்ட மூட்டு வலியும் குணமாகும்.

Leave a Comment