வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. - Tamil Crowd (Health Care)

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

  வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகிறது.

 வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகிறது. தென்கிழக்கு, தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தென்கிழக்கு, தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வளிமண்டல சுழற்சி இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும்.

 இதனால் நெல்லை, தென்காசி, குமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்ட மலைப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment