ஒரு நாள் விடுமுறை - அதிரடி அறிவிப்பு. - Tamil Crowd (Health Care)

ஒரு நாள் விடுமுறை – அதிரடி அறிவிப்பு.

 ஒரு நாள் விடுமுறை – அதிரடி அறிவிப்பு.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக தேர்தல் நடக்கும் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஏப்ரல் 6 ஆம் தேதி மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது .

அதே நேரத்தில் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள அத்தியாவசிய சேவை அலகுகள் மற்றும் மின்விநியோக அமைப்புகள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment