மீண்டும் ஊரடங்கு வரும் என்று அச்சம்; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்.
மீண்டும் ஊரடங்கு வரும் என்று அச்சம்; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்; ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்.
கொரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. பொது மக்கள் மாஸ்க் அணியாமல் சகஜமாக வெளியில் சுற்றுவது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற அலட்சியத்தால் கொரோனா தாக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.