குரூப் 1 – தேர்வில் மெகா ஊழல்- தேர்வர்களை வஞ்சிக்கும் டிஎன்பிஎஸ்சி(TNPSC).
அதாவது 3.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் (deputy collector) உட்பட உயரிய பதவிக்கான TNPSC குரூப்-1 தேர்வு நடந்தது.இதில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டது..அதில் 45 கேள்விகளுக்கு மேல் இதுவரை தவறு என ஆதாரத்துடன் உறுதிபட கண்டறியப்பட்டுள்ளது..
TNPSC தேர்வாணையம் 3/1/2021 யில் நடந்து முடிந்த தேர்வுக்கு Tentative answers key வெளியிட்டது..இந்த விடைகளுக்கு எதிராக தவறு இருப்பின் மாணவர்கள் 7-1-2021 முதல் 14-1-2021 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மாணவர்கள் கீ சேலஞ்ச் செய்ய அறிவுறுத்தப்பட்டது..
பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தேர்வாணையத்தின் கேள்வித்தாளில் தவறுகளை சுட்டிக் காட்டினார்கள்..கீ சேலஞ்ச் செய்வதற்கு மிக அதிவேக இணைய தளம் தேவை ,கணினி போன்றவை இருந்தால் மட்டுமே நாம் சரியாக செய்ய முடியும்.ஏனென்றால் கீ சேலஞ்ச் செய்யும்பொழுது ஆதாரமாக புத்தகத்தின் பக்கங்களையும் அந்த புத்தகத்தை பற்றிய தகவலையும் இணைக்க வேண்டும் அதை பிடிஎஃப் வடிவில் மாற்றி அப்லோட் செய்ய வேண்டும்.கணினி அறிவும் சிறந்த இணையதளத்தில் தேடும் திறன் படைத்தவர்கள் மட்டுமே சரியான விடையை கண்டறிந்து தவறுகளை சுட்டிக் காட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழ்நாட்டில் பல கிராமத்தில் இணையதள வசதி இல்லை என்பதும் தங்களுக்கு தெரியும் மேலும் பலர் சரியான கைப்பேசியும் வைத்திருப்பதில்லை என்பதை நினைவு கொள்ள விரும்புகிறேன்..
இணையதளத்தில் கீ சேலஞ்ச் செய்யும் போது கடைசி இரண்டு நாளில் சர்வர் குறைபாடு காரணமாக key challenge செய்யும் தகவல்கள் அப்லோடு ஆக மிகவும் காலதாமதம் ஆனது, சில தகவல்கள் பதிவேற்றவும் செய்ய முடியவில்லை, பல கேள்விகள் upload செய்ததற்கு TNPSC தரப்பில் acknowledgement சரியாக வரவில்லை..
இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாம் கேள்வித்தாள் தவறு என key challenge யில் சுட்டிக் காட்டுவதற்கு ஆதாரம் (acknowledgment) கொடுக்காமல் மறைப்பதும் ஒரு வித ஊழலின் ஆரம்பம் ..
7 நாள் மட்டுமே key challenge செய்ய வாய்ப்பு கொடுப்பதும் அதுவும் TNPSC server இணையதளத்தின் வேகத்தை முடக்கி வைத்ததும் மறைமுக ஊழல் வேலையை செய்து வருகிறது தெளிவாகிறது..
1.5 லட்சம் மேல் எழுதும் தேர்வில் Answer key challenge செய்தது 3716 பேர் மட்டுமே..அதனை வைத்து மட்டுமே TNPSC தேர்வு ஆணையம் தேர்வு முடிவை வெளியீட்டது..
தேர்வர்கள் அப்லோட் செய்த ஆதாரங்களை வைத்து 11 பாடங்களில் மிக அறிவு பெற்ற 3 நபர் கமிட்டி ஆய்வு செய்தது.இவர்களுக்கு TNPSC EXPERT COMMITTEE என்று பெயர்..
TNPSC தேர்வுக்கு 8 அடிப்படைப் பாடங்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ள விரும்புகிறேன்..யார் அந்த 3 பேர் ,அவர்கள் சிறந்த ஞான ஒளி பெற்ற அந்த பதினோரு பாடம் எதுவென்று யாருக்கும் தெரியாது..
மேலும் தேர்வாணையம் சார்பில் 20-1-2021 முதல் 27-1 2021 வரை அந்த சிறப்பு எக்ஸ்பர்ட் கமிட்டி இறுதி விடைகள் உருவாக்கியது.அந்த இறுதி விடையின் படியே 9. 2.2020 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் preliminary தேர்வில் 45/200 தவறான கேள்வி கேட்டு இருந்தது..அதனை மறைக்க 4 கேள்விதான் தப்பு என கூறி tentative answer key வெளியிடப்பட்டது ..தேர்வு எழுதியவர்கள் tentative answer key யை அடிப்படையாக வைத்து டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் விடை தவறு என நிரூபித்து ஆதாரங்களை அனுப்பினார்கள்..ஆனால் தேர்வின் முடிவு என்பது tnpsc expert committee உருவாக்கிய FINAL answer key படியே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதாவது 07/01/2021 அன்று வெளியிட்ட Tentative Keys படி இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை tnpsc expert committee உருவாக்கிய FINAL answer key படியே
9. 2.2020 அன்று தேர்வு முடிவுகள் வெளியிட்டது என தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது..இத்தகைய இறுதி final answer key ஆனது தேர்வுகள் முழுவதும் 3 கட்டம் முடிந்த பிறகு வெளியிடுவோம் என்று கூறப்படுகிறது…
கேள்வித்தாளில் ஏராளமான பிழைகள் இருப்பதை மறைக்க tentative answer key வெளியிடுகிறது..
இந்த final answers key மற்றும் TNPSC EXPERT COMMITTEE என்ற பெரிய கண்துடைப்பு வேலையை சொல்லி தப்பித்து விடுகிறார்கள்..
EXPERT COMMITTEE முடிவே இறுதி என தெரிவிக்கும் தேர்வாணையம் FINAL answer key எப்பொழுது வெளியிட்டார்கள் என்ற தகவலை உங்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறேன்..
10/07/2015 நடந்த குரூப் 1 PRELIMS தேர்வுக்கு 11/11/2015 அன்று tentative answer key வெளியிட்டார்கள்..இன்னும் FINAL answer key இதுவரை வெளியிடவில்லை என்பதை கவனத்தில் கொள்க..
29/12/2013 நடந்த குரூப் 1 தேர்வுக்கு நான்கு ஆண்டுகள் கழித்து 09/01/2017 அன்று வெளியிடப்பட்டது .
இதுபோலவே குரூப் 2 மற்றும் குரூப் 4 பல தேர்வுகளுக்கு FINAL answer key இறுதி முடிவுகள் இதுவரை வெளியிடவில்லை இதுவே தொடர்கிறது ..
TNPSC யின் இத்தகை அறமற்ற செயலால் தேர்வை சிறப்பாக எழுதியவர்கள், உண்மையாக படித்தவர்கள், பாதிக்கப்படுகிறார்கள்..
மேலும்அடுத்த தேர்வு எழுத குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும்..
கேள்வித்தாளில் சரியான முறையில் எடுப்பது கிடையாது அதற்கான விடைகளும் சரியாக வெளியிடுவது கிடையாது ஆனால் யுபிஎஸ்சி தேர்வாணையத்தை விட நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Tentative answers key, TNPSC EXPERT team, final answers key என்ற மூன்று கட்டுக்கதைகளை உருவாக்கி ஒட்டு மொத்த மாணவர்களில் உழைப்பையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பல மாணவர்கள் தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் பொதுவாக நீதிமன்றத்தை நாட பயப்படுவார்கள் தன்னுடைய வருங்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ அல்லது தேர்வு எழுதாமல் ஆக்கி விடுவார்களோ என்று பல குழப்பங்கள் அடைவார்கள்.