தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் திருப்தி இல்லை. மு.க. ஸ்டாலின் வாக்களித்த பின் -பேட்டி. - Tamil Crowd (Health Care)

தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் திருப்தி இல்லை. மு.க. ஸ்டாலின் வாக்களித்த பின் -பேட்டி.

 தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் திருப்தி இல்லை. மு.க. ஸ்டாலின் வாக்களித்த பின் -பேட்டி. 

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அதன்பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக கூறிய அவர் தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் திருப்தி இல்லையென அவர் கூறினார்.

முன்னதாக சென்னை மெரினா உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளனர்.

Leave a Comment