12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி -காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை. - Tamil Crowd (Health Care)

12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி -காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை.

  12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி -காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை.

 இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த செய்தியையும் படிங்க…

முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு …!!! | 

இதனால் டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும். 

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரப்பிரேதசம், கர்நாடகா, குஜராத் மற்றும் பஞ்சாப் உள்பட 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.கடந்த 6 ஆம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியான வாரங்களாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.இதனால் பொதுமக்களிடம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Leave a Comment