கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 15 சிறப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்.
இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னையில் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், 15 மண்டலத்திற்கும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 15 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
45 வயதுக்கு மேற்பட்டோர் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தமிழக அரசு. |
தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்வதை சிறப்புக் குழுக்கள் கண்காணிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.