(08-04-2021)இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 19 பேர் பலி. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா தொற்று! - Tamil Crowd (Health Care)

(08-04-2021)இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 19 பேர் பலி. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா தொற்று!

 (08-04-2021)இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 19 பேர் பலி. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா தொற்று!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த பல மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும். 

தமிழகத்தில் இன்று 84,658 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,99,30,436 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 1520 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,59,320 ஆக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

45 வயதுக்கு மேற்பட்டோர் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தமிழக அரசு.

சென்னைக்கு அடுத்தபடியாக , கோவை மாவட்டத்தில் 427 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் இன்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு …!!! 

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 37 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 1,869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,72,415 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 30,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,840 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment