இந்த அமைச்சரால் எப்போதும் அலப்பறை தான்- ஓட்டுபோட்டது கூட ட்ரெண்டானது.. !! - Tamil Crowd (Health Care)

இந்த அமைச்சரால் எப்போதும் அலப்பறை தான்- ஓட்டுபோட்டது கூட ட்ரெண்டானது.. !!

 இந்த அமைச்சரால் எப்போதும் அலப்பறை தான்- ஓட்டுபோட்டது கூட ட்ரெண்டானது.. !!

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதோடு, சில இடங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தவும்பட்டது. 

இந்த செய்தியையும் படிங்க…

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு -நீதிமன்றம் உத்தரவு . 

அந்தவகையில், மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக இருக்கும்  மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்யச் சென்றார். அப்போது அவர் வாக்களித்து முடித்த பின்னர், விவிபேட் இயந்திரத்தில் தனது ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதற்காக நின்றுள்ளார்.

ஆனால், விவிபேட் இயந்திரத்தில் அவரின் வாக்கிற்கான ஒப்புகை சீட்டு வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டதோடு, தனது வாக்குப் பதிவாகியதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறி வாக்குச்சாவடியிலேயே செல்லூர் ராஜூ அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.

பின்னர் அதிகாரி சென்று அவரது வாக்கை உறுதிப்படுத்தியபின்னர் அமைச்சர் அங்கிருந்து சென்றார். இந்நிலையில் அவரது மற்றொரு செயலும் தேர்தல் முடிந்து 2 நாட்கள் கடந்தும் ரெண்டாகி வருகிறது.

இந்தாண்டு வாக்களிக்க வருவோருக்கு தேர்தல் அலுவலர்கள் சானிடைசர் கொடுத்து பின்னர் பாலிதீன் கையுறைகளை அளித்தனர். அந்த கிளவுஸை வலது கையில் அணிந்து கொண்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த செய்தியையும் படிங்க…

(+2) பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா,  ஒத்திவைப்பதா?*

 இங்கு தான் அமைச்சர் செல்லூர் ராஜு தனது வேலையை காட்டியுள்ளார். தனது இடதுகையில் மை வைத்த பின்னர் அவர் சென்று வாக்களித்துள்ளார். அப்போது கைகளை உயர்த்து காட்டிய அவர் தனது இடது கையில் அந்த கிளவுஸை மாட்டியிருந்தது தெரியவந்தது.

இதனால் அங்கிருந்த அதிகாரிகள், பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அமைச்சர் என்பதால் யாரும் எதுவும் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment