அதிர்ச்சி தகவல்..! கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது- இந்த வயதினர் தான்…!!
கொரோனா முதலாவது அலையின் போது முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 30 முதல் 39 வயதுள்ள இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இந்த இரண்டாவது அலையிலும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மும்பை அளவுக்கு நோய் தொற்று இல்லை என்றாலும் கூட தமிழகத்தை பொறுத்தவரை சென்னை பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கடந்த முறை கொரோனாவால் வயதான மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவிகிதம் பேரும் 40 முதல் 49 வயதினர் 18.37 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு -நீதிமன்றம் உத்தரவு .
50 முதல் 59 வயதினர் 17 . 97 சதவிகிதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவிகிதமும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 20 முதல் 29 வரையிலான வயதினர் 17.93 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1 . 60 சதகிவிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்கள் தான் அதிகமாக நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஆண்கள் 59.71சதவீதம் பேரும், பெண்கள் 40.29சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது….