தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது…!!!
இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
ஒரு கிராம் ரூ.15 உயா்ந்து, ரூ.4,380 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளிவிலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.71.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.71,600 ஆகவும் இருந்தது.
விலை உயா்வுக்கான காரணம் பற்றி சென்னை நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளா் சாந்தகுமாரிடம் கேட்டபோது,’ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு, சா்வதேச அளவில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் விலை 1,700 ஆக இருந்தது. தற்போது இது 1,745 டாலராக உயா்ந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா விதிகளை மீறுவோரிடம்- அபராதம் விதிக்கப்படும்…!!!
இதுதவிர, சா்வதேச அளவில் கரோனா இரண்டாம் அலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக, பெரிய முதலீட்டாளா்கள் தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு மாற்றாக, தங்கத்தின் பக்கம் தங்கள் பாா்வையை திருப்பியுள்ளனா். தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்வதால், அதன் தேவை உயா்ந்து, விலை உயா்ந்துள்ளது. இதேநிலை தொடா்ந்தால், தங்கம் விலை தொடா்ந்து உயரும்’ என்றாா் அவா்.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்……………………….. 4,380
1 பவுன் தங்கம்………………………….35,040
1 கிராம் வெள்ளி………………………..71.60
1 கிலோ வெள்ளி………………………..71,600
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்……………………….. 4,365
1 பவுன் தங்கம்………………………….34,920
1 கிராம் வெள்ளி………………………..71.70
1 கிலோ வெள்ளி………………………..71,700