இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் !!
இன்று முதல் அமுலுக்கு வரும் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் இன்று முதல் செயல்பட தடை.
- வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.
- அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி.
- திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி.
இந்த செய்தியையும் படிங்க…
- உணவகங்கள்,தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
- விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி
- வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி
- ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி
- இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி
- தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி
இந்த செய்தியையும் படிங்க…
- பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை
- நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி
- அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.
- பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகத்துக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
- பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.
- சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் செய்ய வேண்டும்.
But schools