'கொளுத்தும் வெயில்' -மக்களுக்கு ஓர் நற்செய்தி! - Tamil Crowd (Health Care)

‘கொளுத்தும் வெயில்’ -மக்களுக்கு ஓர் நற்செய்தி!

 ‘கொளுத்தும் வெயில்’ -மக்களுக்கு ஓர் நற்செய்தி!

ஏப்.12 வரை தென் தமிழகம், வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

POST OFFICE செம்ம ஸ்கீம்: தினமும் ரூ95 எடுத்து வைங்க. மொத்தமாக ரூ14 லட்சம் ரிட்டன்…!!! 

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

வாக்குகளை எண்ணுவதற்கு அரசு ஊழியர்களுக்கு -பயிற்சி…!!! 

நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் இன்றும் நாளை மறுநாள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த செய்தியையும் படிங்க…

 12 பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி -மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு. 

வருகின்ற 13 மற்றும் 14 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment