தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம் - மீறினால் நடவடிக்கை !! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம் – மீறினால் நடவடிக்கை !!

 தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம் – மீறினால் நடவடிக்கை !!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. முழு பொதுமுடக்கம் என்றாலும் கூட நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி அனைத்து தியேட்டர்களிலும் 50% இருக்கைகள் மட்டும் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே போல் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50% இரவு 11 மணி வரை உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் உட்கார்ந்து செல்ல அனுமதி, டாக்ஸியில் ஓட்டுநர் சேர்க்காமல் 3 பேர், ஆட்டோவில் ஓட்டுநர் சேர்க்காமல் 2 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

அந்த வகையில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்த உள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்த செய்தியையும் படிங்க…

அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும். அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை கூறினாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.https://eregister.tnega.org/ என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெறலாம்.

Leave a Comment