45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் - ஆணையர்..!! - Tamil Crowd (Health Care)

45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர்..!!

 45 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளிலே தடுப்பூசிப் போடப்படும் – ஆணையர்..!!

45 வயதிற்கு மேற்பட்ட நூறு நபர்கள் ஒரே பகுதியில் வசிக்கும் பட்சத்தில், அந்த பகுதிக்கே சென்று அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

சென்னை பாலவாக்கத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை மீண்டும் முழுவீச்சில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் அவர்கள், வீடு வீடாக வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்த செய்தியையும் படிங்க…

45 வயதுக்கு மேற்பட்டோர் 2 வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தமிழக அரசு.

சென்னையில் ஊழியர்கள் 250 வீடுகளுக்கும் மேல் பார்வையிட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சூழ்நிலையைப் பொறுத்து ஊழியர்கள் அதிகரிக்கப்படுவார்கள் எனக் கூறினார். மேலும் மக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளிலேயே கொரோனா பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

அதிர்ச்சி தகவல்..! கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது- இந்த வயதினர் தான்…!! |

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டு தவணை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் இரண்டாவது தவணை போட்டால்தான் நூற்றுக்கு நூறு பலன் கிடைக்கும் எனக் கூறினார். 45 வயது மேற்பட்டோர் தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறியப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், 45 வயதிற்கு மேற்பட்ட நூறு நபர்கள் ஒரு பகுதியில் வசிக்கும் பட்சத்தில், அந்த பகுதிக்கே சென்று அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைச் சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment