மாம்பழம் 18 இடங்களில் ஜெயிக்கும்- ராமதாஸ்..!!
ஓட்டு போட்ட அன்றைக்கு மாம்பழக் கட்சி 13 இடத்துல ஜெயிச்சிடும்னு தகவல் கேட்டு பலருக்கும் எரிச்சல் எனக்கு கிடைத்திருக்கிற தகவல்படி மாம்பழக் கட்சி 16 முதல் 18 இடங்களில் ஜெயிக்குமாம். மே 2ஆம் தேதி இது நிஜமாகும் போது பலருக்கும் இன்னும் அதிகமா எரியும் என்று டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
வேட்பாளர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் தூக்கத்தை தொலைத்துள்ளனர். மே 2ஆம் தேதி வரை பலருக்கும் பக் பக் மனநிலைதான். அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமக 16 முதல் 18 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கையாக கூறி வருகிறார்