கியாரண்டி(GUARANTEE), வாரண்டி(WARRANTY) வித்தியாசம்- தெரியுமா?
- கியாரண்ட்டி ஒரு பொருள் விற்பனை செய்யப்பட்ட பின், அப்பொருளின் செயல்பாடு மற்றும் சேவை குறித்த வாக்குறுதியை கியாரண்டி எனப்படும்.
- கியாரண்ட்டி என்பது விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தில் குறைவு இருந்தால், பழுது நீக்கம் அல்லது பணத்தை திருப்பி அளித்தல்(RETURN) ஆகியவற்றின் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என வாடிக்கையாளருக்கு உற்பத்தியாளர்கள் அளிக்கப்படும், வாக்குறுதியாக செயல்படுகிறது என்பது பொறுப்பான குறிப்பாகும்.
- பொருள், சேவை மற்றும் உரிய நபருக்கு பொருந்தும்.
- வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாக இருக்கும்.
- கட்டணம் ஏதுமில்லை.
- ஒவ்வொரு பொருளுக்கும் கால அளவு மாறுபடுகிறது.
- குறைபாடு இருப்பின் பணத்தை திரும்பப் பெற முடியும்.
இந்த செய்தியையும் படிங்க…
வாரன்டி (WARRANTY):
- வாரன்டி விற்பனை செய்யப்படும் பொருள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், உண்மையானவை என உற்பத்தியாளர் விற்பனையாளர் நுகர்வோருக்கு அளிக்கப்படும் உறுதியே வாரண்டி எனப்படும்.
- வாரன்டி என்பது பொருளின் தன்மை, குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் உண்மை மற்றும் நேர்மையானவை எனவும் தவறும் பட்சத்தில் பழுது நீக்கம் அல்லது பதிலீடு(REFIND) மூலம் நிவர்த்தி செய்யப்படும் என எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் உறுதியாகும் என்பது உறுதியாகும்.
- பொருளுக்கு மட்டுமே பொருந்தும்.
- பொதுவாக எழுத்துப்பூர்வமாக இருப்பதால் நிரூபிப்பது எளிதானது.
- பொருளை வாங்குபவர் வாரண்டிகான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
- நீண்டகாலம் உத்தரவாதம்.
- குறைபாடு இருப்பின் பணத்தை திரும்ப பெற முடியாது.
பொதுவாக பொருளின் செயல்பாடு குறித்து வாரண்டி மற்றும் கியாரண்டி ஆகிய இரண்டும் ஓரளவு ஒரே மாதிரியாக தோன்றினாலும், வாரண்டி, கியாரண்டி வெவ்வேறு தன்மை கொண்டவை ஆகும்.