தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!! - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!!

 தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!!

பொது எச்சரிக்கை: 

  • தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து,
  •  தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். 
  • வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இன்று மொத்தமாக 6,583 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த தமிழக கொரோனா பாதிப்பு 9,33,434​​​​ ஆக உயர்ந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் -நாளை முக்கிய ஆலோசனை!| 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது.

இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 6,583 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,314 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 8,78,571 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,65,126 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment